உலகம்

ஜெர்மனியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய ராணுவ சேவை.. எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றம்

Published On 2025-12-08 04:30 IST   |   Update On 2025-12-08 04:31:00 IST
  • ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி ராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது.

இதற்காக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும்.

இந்த ராணுவ சேவையானது ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு விருப்ப அடிப்படையிலும் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2 லட்சத்து 60 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இடதுசாரி கட்சியினர் இந்த கட்டாய ராணுவ சேவைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News