உலகம்

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா- மேல்சிகிச்சைக்காக நாளை லண்டன் செல்கிறார்

Published On 2025-12-08 14:33 IST   |   Update On 2025-12-08 14:33:00 IST
  • கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு.
  • ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கீடு.

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.

இதுதொடர்பாக வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது," ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9 மணிக்கு புறப்படும் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது" என்றார்.

இந்த விமானம், ஜெர்மனியை தளமாகக் கொண்ட எப்.ஏ.ஐ விமானக் குழுமத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News