உலகம்

சூடான் மழலையர் பள்ளி மீது துணை ராணுவம் டிரோன் தாக்குதல் - 33 குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

Published On 2025-12-08 01:42 IST   |   Update On 2025-12-08 01:42:00 IST
  • ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
  • அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் RSF தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சூடானிய மருத்துவர்கள் அமைப்பு இதை தெரிவித்துள்ளது.

சிவிலியன் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டத்தை ஆர்.எஸ்.எஃப் வெளிப்படையாக மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Tags:    

Similar News