உலகம்
null

'இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு' - 10 ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட பொம்மை கண்கள்!

Published On 2025-12-08 17:39 IST   |   Update On 2025-12-08 17:54:00 IST
  • தரமான கைவினைப் பொருட்களை மட்டுமே வழங்கவேண்டும் என்பதே தாமதத்திற்கு காரணம்
  • ஆர்டர் செய்யப்பட்ட கண்களுக்கான பொம்மைகள் முன்னரே விற்கப்பட்டன

சீனாவில் லீ என்ற பெண் ஆர்டர் செய்த 'பொம்மை கண்கள்' பத்து ஆண்டுகளுக்கு பின்னர் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த ஆர்டரை லீ மறந்தேவிட்டதாகவும், தனது மொபைல் நம்பரை மாற்றாததால் பார்சலை நவ.27 அன்று பெற்றதாக தெரிவித்துள்ளார். பார்சல் வரவிருக்கிறது என்பதற்கான குறுஞ்செய்தியை நவ.25ஆம் தேதி பெற்றுள்ளார். 515 யுவான் (ரூ. 6,566) செலுத்தி வாங்கிய ஆர்டரில் கூடுதலாக ஒரு ஜோடி பொம்மை கண்களும் இருந்துள்ளன.

உயர்தர, குறைபாடற்ற, தரமான கைவினைப் பொருட்களை மட்டுமே வழங்கவேண்டும் என்பதே தாமதத்திற்கு காரணம் என விற்பனையாளர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும், ஆனால் பெற்ற ஆர்டர்களை மட்டும் டெலிவரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தங்கள் பொருட்களைப் பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுபக்கம், லீ ஆர்டர் செய்யப்பட்ட கண்களுக்கான பொம்மைகளை ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், தற்போது இந்த கண்களை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  


Tags:    

Similar News