உலகம்

ஆப்பிரிக்க நாடான பெனினில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முறியடிப்பு

Published On 2025-12-08 09:54 IST   |   Update On 2025-12-08 09:54:00 IST
  • பெனின் ஆட்சியை பிடித்ததாக ராணுவ கிளர்ச்சி குழுவால் அறிவித்தது.
  • நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அதிபர் பத்ரிக் தாலோன் அறிவிப்பு

பெனின் நாட்டில் அரசு ஊடகத்தை கைப்பற்றி, அதிபர் பத்ரிக் தாலோனை பதவியில் இருந்து நீக்கி ஆட்சியை பிடித்ததாக அறிவித்த ராணுவ கிளர்ச்சி குழுவால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவப் படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

தொலைக்காட்ச்சி வழியே மக்களிடம் பேசிய பெனின் அதிபர் பத்ரிக் தாலோன், "நமது இராணுவமும் அதன் தலைவர்களும் தேசத்திற்கு விசுவாசமாக இருந்து வரும் கடமை உணர்வை நான் பாராட்ட விரும்புகிறேன். நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News