தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் - இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
- பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.
- கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.
பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ரா விபூஷணா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மோடிக்கு அதிபர் அனுர குமார திச நாயகே அணிவித்தார்.
தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:
* மீனவர்கள் பிரச்சனையை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.
* கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
* கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.