உலகம்

தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்த மகன்- வீடியோ

Published On 2024-12-31 14:42 IST   |   Update On 2024-12-31 14:42:00 IST
  • கடந்த 18 வருடங்களில் என்னால் இயன்றவற்றை செய்து எனது தாயாரின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்து வருகிறேன்.
  • 18 ஆண்டுகளுக்கு பிறகு காதலிலும், வாழ்க்கையிலும் 2-வது வாய்ப்பை பெற என் தாயாரை ஆதரித்தேன்.

பெற்ற தாயின் ஆசை, கனவை நிறைவேற்ற மகன்கள் விரும்புவார்கள். ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தாய் விருப்பப்பட்டார் என்பதற்காக அவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்துல் அஹாத் என்ற அந்த வாலிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார்.

அதில் கடந்த 18 வருடங்களில் என்னால் இயன்றவற்றை செய்து எனது தாயாரின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முயற்சி செய்து வருகிறேன். அவர் எங்களுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார். எனது தாயார் அமைதியான வாழ்க்கைக்கு தகுதியானவர். ஒரு மகனாக நான் சரியானதை செய்தேன் என்று நினைக்கிறேன். 18 ஆண்டுகளுக்கு பிறகு காதலிலும், வாழ்க்கையிலும் 2-வது வாய்ப்பை பெற என் தாயாரை ஆதரித்தேன்.

எனது தாயாரின் 2-வது திருமணம் குறித்து வெளியில் சொல்ல பல நாட்களாக பயந்தேன். ஆனால் இப்போது நீங்கள் காட்டும் அன்பும், பாசமும் என்னை உணர்ச்சி பெருக்கில் மூழ்கடிக்கிறது. எங்களது இந்த முடிவுக்கு மதிப்பளித்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் அப்துல் அஹாத்தின் முற்போக்கான நடவடிக்கையை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி பதிவிட்டனர். சில பயனர்கள் அப்துல் அஹாத்தை அவரது தாயார் நன்றாக வளர்த்திருக்கிறார் என அவரது தாயையும் வாழ்த்தி பதிவிட்டனர்.



Tags:    

Similar News