13 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி வங்கதேசம் பயணம்
- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார்.
- இருநாட்டு உறவுகள் முன்னேற்றத்தைப் பெருக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தார்.
டாக்கா:
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது போராட்டம் வெடித்தது. வன்முறையாக மாறியதில் ஷேக் ஹசீனா பதவியை துறந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்துள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை மந்திரியுமாக இருக்கும் இஷாக் தர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றார். டாக்காவில் விமானம் மூலமாக வந்திறங்கிய அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வங்கதேச இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் அந்த நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு உறவுகள் முன்னேற்றத்தைப் பெருக்குவது தொடர்பாக கலந்தாலோசித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி 13 ஆண்டுக்கு பிறகு வங்கதேசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.