உலகம்

எண்ணெய் விவகாரம்: இந்தியாவுக்கு டிரம்ப் தொடர் மிரட்டல் - ரஷியா கூறியது இதுதான்!

Published On 2025-08-06 02:45 IST   |   Update On 2025-08-06 02:45:00 IST
  • கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசினார்.
  • இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் அச்சுறுத்தல்களை குறிப்பிட்டார்.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து உக்ரைன் போருக்கு உதவுவதால் இந்தியா மீதது ஏற்கனவே விதிக்கப்பட்ட 25% வரியை அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் உயர்த்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார்.

இதற்கிடையே இந்தியா தொடர்பான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் குறித்து ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்.

ரஷிய அரசு செய்தி நிறுவனமான 'டாஸ்'க்கு அளித்த பேட்டியில், "இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு தங்கள் வர்த்தக கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு, அதை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் அச்சுறுத்தல்களை அவர்கள் கவனித்து வருவதாகவும், ஆனால் அவற்றை முறையானதாகக் கருதவில்லை என்றும் கூறினார். 

Tags:    

Similar News