உலகம்

அடுத்த வாரம் தென்கொரியா வரும் டிரம்ப்: ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Published On 2025-10-23 04:48 IST   |   Update On 2025-10-23 04:48:00 IST
  • தென் கொரியாவில் அடுத்த வாரம் ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாடு நடக்கிறது.
  • இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பியாங்காங்:

உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா ராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, தென் கொரியாவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மூங் ஆகியோரை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என தென் கொரியா ராணுவம் புகார் அளித்துள்ளது.

Tags:    

Similar News