உலகம்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி சந்திப்பு

Published On 2023-07-27 02:59 GMT   |   Update On 2023-07-27 02:59 GMT
  • கொரியா போரில் வடகொரியாவின் 70-வது வெற்றி தின கொண்டாட்டத்தில் ரஷிய படை பங்கேற்பு
  • சீன ராணுவ வீரர்களும் வெற்றி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷாய்கு வடகொரியா சென்றுள்ளார். வடகொரிய சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். அப்போது ரஷிய அதிபர் புதின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்ற கிம் ஜாங் உன், பாதுகாப்புத்துறை மந்திரி தலைமையில் ராணுவ குழுவை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இருவர் இடையிலான ஆலோசனை மூலோபாய மற்றும் பாரம்பிய வடகொரியா- ரஷியா நட்பு குறித்ததாக இருக்கும் எனக் கூறினார்.

கொரிய போரில் வடகொரியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில், 70-வது வெற்றி தினம் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய வீரர்கள், சீன வீரர்கள் வட கொரியாக சென்றுள்ளது.

அதிபர் சந்திப்பிற்குப்பின் வடகொரியா ராணுவ மந்திரியை சந்தித்தார். அப்போது ரஷியா மந்திரி செர்கேய் ஷாய்கு ''உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம்'' என வடகொரியாவை பாராட்டினார்.

Tags:    

Similar News