உலகம் (World)

சுவிட்சர்லாந்தில் துணிகரம்: முன்னாள் அழகியை கொடூரமாக கொன்ற கணவன்

Published On 2024-09-13 00:06 GMT   |   Update On 2024-09-13 00:10 GMT
  • சுவிட்சர்லாந்தில் முன்னாள் அழகி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
  • இந்தக் கொலை தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

சுவிட்சர்லாந்து:

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் அழகி ஒருவர் தமது கணவரால் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஜோக்சிமோவிச் (38). இவர் பயிற்சியாளராக வேலை செய்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் பேசலில் உள்ள இவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அவரது கணவர் தாமஸ் கைது செய்யப்பட்டார். முதலில் தம்மை விடுவிக்குமாறு கோரிய தாமஸ், அதன்பின் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில், மனைவி கிறிஸ்டினா முதலில் தம்மைக் கத்தியால் தாக்க வந்ததாகவும், அவரிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே தாக்கினேன் என தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டினா கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக கூறும் மருத்துவ அறிக்கை, அவரது சில உடல் பாகங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு ரசாயனயங்கள் கொண்டு சிதைக்கப்பட்டது. சில உடல் பாகங்கள் சகதியுடன் கலக்கப்பட்டன என தெரிவித்தது. இந்தக் கொலை தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜாமின் கோரிய தாமஸ் மனுவை அந்நாட்டு பெடரல் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

கொலை செய்யப்பட்ட கிறிஸ்டினா 2008-ம் ஆண்டின் மிஸ் சுவிட்சர்லாந்து இறுதிப்போட்டிக்கு தேர்வு ஆனவர் என்பது குறிப்பிடத்த்க்கது.

Tags:    

Similar News