உலகம்
null

VIDEO: காசா இனப்படுகொலைக்கு துணை போகும் Microsoft.. சத்யா நாதெல்லாவை மறித்து ஊழியர் சரமாரி கேள்வி

Published On 2025-05-21 12:41 IST   |   Update On 2025-05-21 12:53:00 IST
  • Azure ஹார்டுவேர் சிஸ்டம்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பொறியாளரான ஜோ லோபஸ் அவரை இடைமறித்தார்.
  • ட் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனரீதியாக அழிக்க உதவும் போது அமைதியாக இருக்க முடியாது என்று லோபஸ் கூறினார்.

காசா மீது தாக்குதல் நடந்த இஸ்ரேல் அரசுக்கு தங்கள் நிறுவனத்தின் ஏஐ மூலம் உதவி செய்வதை மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் காசாவில் இனப்படுகொலையை குறித்து கேள்வி எழுப்பி மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவின் உரையை இடைமறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திங்களன்று மைக்ரோசாப்ட் பில்ட் நிகழ்வில் நாதெல்லா முக்கிய உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

உரையின் போது, மைக்ரோசாப்டின் Azure ஹார்டுவேர் சிஸ்டம்ஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் பொறியாளரான ஜோ லோபஸ் அவரை இடைமறித்து கேள்வி எழுபத் தொடங்கினார். மைக்ரோசாப்ட் பாலஸ்தீனியர்களை எப்படிக் கொல்கிறது என்பதைக் காட்ட முடியுமா? இஸ்ரேலிய போர்க்குற்றங்களை Azure எவ்வாறு ஆதரிக்கிறது என்பதைக் காட்ட முடியுமா? என்று அவர் கேள்வி கேட்டார்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் அதிகாரிகள் லோபஸை அங்கிருந்து அகற்றினர். நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், மைக்ரோசாப்ட் இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனரீதியாக அழிக்க உதவும் போது அமைதியாக இருக்க முடியாது என்று லோபஸ் கூறினார்.

Tags:    

Similar News