உலகம்

சீனா செல்லும் வடகொரியா தலைவர்: காரணம் இதுதான்

Published On 2025-08-29 05:28 IST   |   Update On 2025-08-29 05:28:00 IST
  • சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ரஷியா அதிபர் புதின் ஏற்றுக்கொண்டார்.
  • வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.

பியாங்காங்:

வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன.

இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் ராணுவ அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ரஷியா அதிபர் புதின் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷியா அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். ஆனால் வடகொரியா தலைவரின் வருகை உடனடியாக உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், வடகொரியா அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சீனாவின் அழைப்பை ஏற்று ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டது.

அச்சமயத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News