உலகம்

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

Published On 2025-06-17 08:27 IST   |   Update On 2025-06-17 08:27:00 IST
  • ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது.
  • இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News