உலகம்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் எப்படி இருக்கிறார்? மருத்துவமனை விளக்கம்

Published On 2024-12-30 09:18 IST   |   Update On 2024-12-30 09:18:00 IST
  • அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
  • குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு நேற்று நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நேதன்யாகு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

"பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். அவர் மீட்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார், வரும் நாட்களில் அவர் கண்காணிப்பில் இருப்பார்" என்று ஹடாசா மருத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, நேதன்யாகுவுக்கு புரோஸ்டேட் விரிவாக்கத்தால் சிறுநீர் பாதை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அவரின் அலுவலம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, மார்ச் மாதத்தில், நேதன்யாகு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், நேதன்யாகுவின் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும் பேஸ்மேக்கரை அவரது உடலில் பொருத்தினர்.

Tags:    

Similar News