இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பாலஸ்தீன வெளியுறவு துறை மந்திரி ரியாத் அல் மாலிக் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும் போது, "நிர்வாகிகள் இன்றைய உரையை முடிப்பதற்குள் 60 குழந்தைகள் உள்பட 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருப்பர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 5 ஆயிரத்து 700-க்கும் அதிக பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோர் குழந்தைகள், 1300-க்கும் அதிகமானோர் பெண்கள்," என்று தெரிவித்து உள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் துணை தளபதிகளான அப்துல் ரஹ்மான், கலீல் மஹ்ஜாஸ் மற்றும் கலீல் டெத்தாரி இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து பாலஸ்தீனத்தின் ராமல்லா பகுதியில் பாலஸ்தீன குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. "இஸ்ரேல் தாக்குதல்களில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தினர் பாலஸ்தீன ஆண்களை கைது செய்து சிறையில் வைப்பதை செய்து வருகின்றனர்," என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் உள்ள ஹமாஸ்-ஐ முழுமையாக வேரறுப்போம். ஹமாஸ்-இன் பயங்கரவாதத்தை அழித்து, அதன் அரசியல் கட்டமைப்பை உடைத்தெறிவோம். எங்களின் பிணைகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் திறன்களை அழிப்பதற்காக கடந்த 24 மணிநேரத்தில் 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளன என இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோகை சந்தித்தார். அப்போது ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் அரசுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் பல ஆண்டுகளாக ஆதரவளித்து வருகிறது. இரு தசாப்தங்களாக இந்த ஆதரவு உள்ளது. ஈரான் இன்றி ஹமாஸ் அமைப்பினரால் இயங்கவோ அல்லது தொடர்ந்து செயல்படவோ முடியாது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்திட்ட தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் சென்றடைந்தார். அவரை தூதரக அதிகாரிகள் அவரை வரவேற்றனர். இஸ்ரேல் பிரதமரை சந்திப்பதுடன், பாலஸ்தீன தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
இஸ்ரேலுடன் போர் நடத்த லெபனான் அரசு விரும்பவில்லை என அந்நாட்டு அமைச்சர் ஜியான் மக்காரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காசாவில் 'உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம்' வேண்டும் என ஐக்கிய நாடுகள் உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார்.