இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பாலஸ்தீன வெளியுறவு... ... இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து பாலஸ்தீன வெளியுறவு துறை மந்திரி ரியாத் அல் மாலிக் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றும் போது, "நிர்வாகிகள் இன்றைய உரையை முடிப்பதற்குள் 60 குழந்தைகள் உள்பட 150 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு இருப்பர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 5 ஆயிரத்து 700-க்கும் அதிக பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோர் குழந்தைகள், 1300-க்கும் அதிகமானோர் பெண்கள்," என்று தெரிவித்து உள்ளார்.
Update: 2023-10-24 16:04 GMT