உலகம்

போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 28 பேர் உயிரிழப்பு

Published On 2025-11-20 16:08 IST   |   Update On 2025-11-20 16:08:00 IST
  • போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
  • ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மத்யஸ்தத்தில் கடந்த 5 வாரங்களுக்கு முன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காசா நகர் மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் இஸ்ரேலிய விமானப்படை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டைத் தாக்கத் தயாராகி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் அளவுக்கு வந்ததற்கு பின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 280 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

டிரம்ப்பின் அமைதி திட்டம் மூலம் சர்வதேச படைகளை காசாவுக்கு அனுப்புவது குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இஸ்ரேல் காசாவை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News