இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டு கொலை - வெளியுறவுத்துறை அமைச்சர் இரங்கல்
- உயிரிழந்த மாணவரின் பெயர் சாய் தேஜா என்று தகவல் வெளியாகியுள்ளது.
- சாய் தேஜா சிகாகோவில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உயிரிழந்த மாணவரின் பெயர் சாய் தேஜா என்று தகவல் வெளியாகியுள்ளது. சாய் தேஜா இந்தியாவில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு எம்.பி.ஏ. படிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் சிகாகோவில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "இந்திய மாணவர் சாய் தேஜா கொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளோம். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்யும்" என்று தெரிவிதிக்கப்பட்டுள்ளது.
இந்திய துணைத் தூதரக பதிவை பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இந்தச் செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுவதாக" பதிவிட்டுள்ளார்.