உலகம்

இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது - அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் விமர்சனம்

Published On 2025-07-31 13:08 IST   |   Update On 2025-07-31 13:08:00 IST
  • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்
  • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்யாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷ்யாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News