உலகம்

VIDEO: 300 பேர் பயணித்த விமானத்தில் தீ விபத்து... அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

Published On 2025-04-22 08:27 IST   |   Update On 2025-04-22 09:07:00 IST
  • டெல்டா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விமானத்தில் இருந்த 300 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News