உலகம்
null

பாங்காக் சாலையில் திடீரென ஏற்பட்ட பெரும் பள்ளம் - வைரல் வீடியோ

Published On 2025-09-24 14:51 IST   |   Update On 2025-09-24 14:57:00 IST
  • கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது.
  • பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார்கள் விழுந்தது நொறுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலைக்கு அடியில் இருந்த சுத்திகரிப்பு குழாய்கள் வெடித்ததால் இந்த பெரும் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News