உலகம்

சொந்த வீடு வாங்க சிக்கனம்.. பணியிட கழிவறையிலேயே குடியிருக்கும் சீன பெண் - வாடகை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-03-29 20:51 IST   |   Update On 2025-03-29 20:53:00 IST
  • 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
  • தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.

சொந்த வீடு வாங்குவது பலரின் கனவாக இருக்கும். ஆனால் அந்த கனவுக்காக ஒருவர் எந்த எல்லையையும் கடக்கலாம் என்பதற்கு உதாரணமாக சீன பெண் ஒருவர் திகழ்ந்து வருகிறார்.

சீனாவில் யாங் என்ற 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். அதிகரித்து வரும் வாடகை செலவுகளையும் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மாதம் ரூ.34,570 சம்பாதிக்கும் யாங் வாடகையாக ரூ.545 மட்டுமே செலுத்துகிறார். குளிப்பது, சமைப்பது, துணிகளை துவைப்பது, உறங்குவது என அனைத்து வேலைகளையும் அந்த சிறிய இடத்திலேயே அவர் செய்து கொள்கிறார்.

பணிநேரங்களில் மற்றவர்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தனது உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றி விடுகிறார்.



ஆரம்பத்தில், யாங் மாதத்திற்கு ரூ. 2,290 வாடகை செலுத்த முன்வந்தார். ஆனால் அவரது முதலாளி அதற்கு மறுத்துவிட்டார். தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.

கடையில் தங்குவதற்கு அலுவலக இடம் வழங்கப்பட்டாலும், கதவு இல்லாததால் யாங் சங்கடமாக உணர்ந்தார். எனவே தற்போது ஓய்வறையில் வசிக்கும் யாங், கதவில் துணியை  தொங்கவிட்டு, தனது வீடாக அதை பாவிக்கிறார்.

மேலும் இரவில் மடிப்பு படுக்கையை உபயோகிக்கிறார். தனது ரூ.34,570 மாத சம்பளத்தில் யாங் தனது செலவுகளை வெறும் ரூ. 4,500 ஆகக் குறைத்து கடும் சிக்கனத்துடன் வாழ்ந்து வருகிறார்.

Tags:    

Similar News