உலகம்

காட்டுத்தீ

சிலியில் பரவி வரும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு

Update: 2023-02-04 20:49 GMT
  • காட்டுத்தீ சிக்கி 500க்கும் மேர்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
  • காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சான்டியாகோ:

சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சிலியில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. பயோபியா பகுதியில் 16 பேர், லா அருணாசியாவில் 5 பேர், நுபில் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News