உலகம்

பாகிஸ்தானுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.6,800 கோடி நிதியுதவி.. இந்தியா எதிர்ப்பு

Published On 2025-06-05 05:15 IST   |   Update On 2025-06-05 05:15:00 IST
  • பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது.
  • பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8,500 கோடி) நிதியுதவி கிடைத்தது.

ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) சமீபத்தில் சுமார் 800 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,800 கோடி) நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்ததற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வாதத்தின்படி, பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆபத்தான முறையில் பலவீனமடைந்து வருகிறது.

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வரி வருவாய் 2018 ஆம் ஆண்டில் 13 சதவீதமாக இருந்தது, ஆனால் 2023 ஆம் ஆண்டில் அது வெறும் 9.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வருகிறது, இது நாட்டின் பொருளாதார பாதிப்பின் பிரதிபலிப்பாகும்.

இதுபோன்ற சூழ்நிலையில், சர்வதேச நிதியமைச்சகம் மற்றும் ADB போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பதிலாக இராணுவத் தேவைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு திருப்பிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த மாதம், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மூலம் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 8,500 கோடி) நிதியுதவி கிடைத்தது. அப்போதும் இந்தியாவும் தனது ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News