உலகம் (World)

எல்லாம் அதனாலதான்.. BRICS கூட்டமைப்பை உருவாக்கியது ஏன்? ஐ.நா.-வில் ஜெய்சங்கர் பளிச் பதில் - வீடியோ

Published On 2024-09-13 08:38 GMT   |   Update On 2024-09-13 08:43 GMT
  • முதல் பிரிக்ஸ் மாநாடானது 2009 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று ரஷியாவின் ஏகட்ரின்பர்க் [Yekaterinburg] நகரில் வைத்து நடந்தது.
  • ஐநாவுக்கான பிரான்சில் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான ஜீன் டேவிட் லெவிட்டே [Jean David Levitte] எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

BRICS கூட்டமைப்பு என்பது 2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பாகும். இதில் 2010 இல் தென் ஆப்பிரிக்கா இணைந்து கொண்டது. இந்த 5 நாடுகளில் பெயரில் உள்ள முதல் எழுத்தின் சுருக்கமே BRICS. கடந்த ஜனவரி 2024 இல் எகிப்து, எத்தியோப்பியா, இரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவையும் இந்த அமைப்பில் இணைய இசைவு தெரிவித்துள்ளன.

BRICS கூட்டமைப்பின் முக்கிய நோக்கம், அமைதியை நிலைநாட்டுவது, பாதுகாப்பு , நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதே ஆகும். முதல் பிரிக்ஸ் மாநாடானது 2009 ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று ரஷியாவின் ஏகட்ரின்பர்க் [Yekaterinburg] நகரில் வைத்து நடந்தது. 16 வது பிரிக்ஸ் மாநாடானது வரும் அக்டோபர் 22 முதல் 24 வரை ரஷியாவின் காசன் [Kazan] நகரில் வைத்து நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தற்போது ரஷியா சென்றுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் இந்தியாவுக்கான அழைப்பு செய்தியைத் தெரிவித்துள்ளார் அதிபர் புதின்.

Egypt, Ethiopia, Iran and the United Arab Emirates. ஸ்விட்ஸ்ர்லாந்தில் உள்ள ஜெனிவா சென்டரில் நடந்த ஐநா சபை கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் BRICS கூட்டமைப்பு ஏன் உருவானது என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றைக் கூறியுள்ளார். அதாவது, அமரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்ற ஜி7 கூட்டமைப்பில் மற்ற யாரையும் அனுமதிக்காததால்தான் BRICS உருவானதாகக் கூறியுள்ளார்.

சர்வதேச பொருளாதார மற்றும் பாதுகாப்பு நல்லுறவுகளைப் பேண வளர்ச்சிப்பாதையில் இருக்கும் நாடுகளுக்குக் குழு தேவை. ஆனால் அதற்கான குழுவான ஜி7 இல் நீங்கள் யாரையும் நுழைய விடவில்லை. எனவே நாங்கள் எங்களுக்கான ஒரு குழுவை உருவாக்கினோம். நாளடைவில் அது மிகப்பெரிய ஒரு குழுவாகப் பரிணமித்துள்ளது. எல்லோரும் அந்த குழுவின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியுள்ளனர் என்று ஐநாவுக்கான பிரான்சில் முன்னாள் நிரந்தர பிரதிநிதியான ஜீன் டேவிட் லெவிட்டே [Jean David Levitte] எழுப்பிய கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். சமீபத்தில் இத்தாலியின் நடந்த ஜி7 மாநாட்டில் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News