உலகம்
null

மருந்து பொருட்களுக்கு 100% வரி - டிரம்ப் அறிவிப்பு

Published On 2025-09-26 09:22 IST   |   Update On 2025-09-26 11:29:00 IST
  • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.
  • இந்தியாவின் மருந்துத் துறை இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தார்.

மேலும், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை அடுத்து இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்வைத்தது.

இந்த நிலையில், அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகத்தை மிகவும் சார்ந்திருக்கும் உள்நாட்டுத் தொழில்களில் ஒன்றான இந்தியாவின் மருந்துத் துறை, இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News