செய்திகள்
பிறப்பு விகிதம் குறைவுக்கு மத்தியில் சீனாவில் திருமணங்கள் செய்வது சரிவு

பிறப்பு விகிதம் குறைவுக்கு மத்தியில் சீனாவில் திருமணங்கள் செய்வது சரிவு

Published On 2021-11-25 02:46 GMT   |   Update On 2021-11-25 02:46 GMT
சீனாவில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீஜிங் :

உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள நாடு சீனா. ஆனால் அங்கு இப்போது குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.இந்த நிலையில் அங்கு இப்போது திருமணங்கள் செய்வதும் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீன புள்ளியியல் ஆண்டு புத்தகம் காட்டுகிறது. நடப்பு 2021-ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் அங்கு 58 லட்சத்து 70 ஆயிரம் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் குறைவுதான்.

இது தொடர்ந்து குறையும் என எதிர்பார்ப்பதாக சீன அரசு நாளிதழ் கூறி உள்ளது. சீனாவில் குழந்தைகள் பிறப்புவிகிதத்தை பொறுத்தமட்டில் அது கடந்த ஆண்டில் 0.85 சதவீதமாக இருந்தது. 1978-க்கு பின்னர் தொடர்ந்து பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கு கீழே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News