செய்திகள்

புல்வாமா தாக்குதல் கொடூரமானது- அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்

Published On 2019-02-20 07:18 GMT   |   Update On 2019-02-20 07:18 GMT
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #Pulwamaattack #Trump
வாஷிங்டன்:

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, “புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. அது குறித்த அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களை பாகிஸ்தான் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.

அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

இத்தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு பேசினோம். சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.


அவரை தொடர்ந்து டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால்டன், ராணுவ மந்திரி மைக்பாம்பியோ, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோரும் பேட்டி அளித்தனர்.

அனைவரும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தனர். ஜெய்ஷ் இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக்க ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர். #Pulwamaattack #Trump
Tags:    

Similar News