செய்திகள்

சவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒரு நாள் தாமதம்

Published On 2019-02-16 04:39 GMT   |   Update On 2019-02-16 04:39 GMT
சவுதி இளவரசர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்த வார இறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் தாமதமாகியுள்ளது. #SaudiPrince #MohammedbinSalman
இஸ்லாமாபாத்:

சவுதி நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இஸ்லாமாபாத்திற்கு வர இருக்கிறார். இந்த வார இறுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சவுதி இளவரசர் பாகிஸ்தான் செல்வார் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக 5 டிரக்குகளில் இளவரசரின் பயிற்சி சாதனங்கள், மரப்பொருட்கள், நாற்காலி மற்றும் அவர் பயன்படுத்தும் பொருட்கள் பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டன.

சவுதி இளவரசரின் பாதுகாப்பு குழுவினர் மற்றும் சவுதி பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தனர். பாகிஸ்தானுக்கு இளவரசராக வருகை தர உள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னதாக பாதுகாப்புத்துறை மந்திரியாக இருந்தபோது, ஏமன் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாகிஸ்தானுக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் சவுதி இளவரசரின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் ஒருநாள் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (பிப்ரவரி 17, 18) அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு இளவரசர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த சுற்றுப் பயண தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சவுதி இளவரசர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிப்ரவரி 19ம் தேதி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SaudiPrince #MohammedbinSalman 
Tags:    

Similar News