செய்திகள்

அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் - 7 தலீபான் பயங்கரவாதிகள் பலி

Published On 2018-11-28 01:30 IST   |   Update On 2018-11-28 01:30:00 IST
தலீபான் பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 7 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். #Taliban #FactoryDestroyed #Airstrike
காந்தஹார்:

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தாலும், அவர்கள் தாக்குதல்களை நிறுத்தவில்லை.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் படைகளும், அங்குள்ள அமெரிக்க கூட்டுப்படைகளும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அங்கு காந்தஹார் மாகாணத்தில், மேவான்ட் மாவட்டம், பேண்ட் இ டெமர் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் வான் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலில் 7 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தலைவர் ரகமதுல்லாவும் ஒருவர். 2 தலீபான் பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தலீபான் பயங்கரவாதிகளின் ஆயுத தொழிற்சாலையும், சக்தி வாய்ந்த வெடிகுண்டு கருவிகளும், கண்ணிவெடிகளும் அழிக்கப்பட்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல் பற்றி தலீபான் பயங்கரவாதிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Tags:    

Similar News