செய்திகள்

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி கொலையில் 2 பேருக்கு சிறை

Published On 2018-10-24 19:52 GMT   |   Update On 2018-10-24 19:52 GMT
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பால்பீர் கொலை வழக்கில் ஹசன் முகமது, யாசின் யூசுப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #IndianOrigin #MurderCase
லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனையொட்டிய சவுதாலில் வசித்து வந்தவர் பால்பீர் ஜோஹல் (வயது 48). இந்திய வம்சாவளி. இவர் கடந்த மார்ச் மாதம் அங்குள்ள மார்ல்பாரோ ரோட்டில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றிய ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், கொலை செய்யப்பட்ட பால்பீர் ஜோஹலுக்கும், சொகுசு காரில் வந்த 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்த காட்சிகளை கண்டுபிடித்தனர்.

அதைத் தொடர்ந்து காரை வைத்து, ஹசன் முகமது (24), யாசின் யூசுப் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது லண்டன் பழைய பெய்லி கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான கொலை குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து ஹசன் முகமதுவுக்கு 26 ஆண்டு சிறைத்தண்டனையும், யாசின் யூசுப்புக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். 
Tags:    

Similar News