'ஜன நாயகன்' Fever... போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த மலேசியா- வைரல் வீடியோ
- ஜன நாயகன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது.
- 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெறுகிறது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக படத்தில் நடித்து உள்ள நடிகர்கள், நடிகைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மலேசியாவிற்கு படையெடுத்துள்ளதால் கோலாம்பூர் நகரமே களை கட்டியுள்ளது.
இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து காணப்படுகிறது. மேலும் இசை வெளியீட்டு விழா நடைபெறும் மைதானத்தில் வெளியே ரசிகர்கள் விஜய் முகம் பொறித்த கொடியுடன் நடனாமாடி கொண்டாடி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் தொடர்பான புகைப்படம் மற்றும் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.