உலகம்

தாய்லாந்து- கம்போடியா இடையே புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்

Published On 2025-12-27 15:20 IST   |   Update On 2025-12-27 15:20:00 IST
  • கடந்த ஒரு வாரமாக எல்லையில் இருநாட்டு வீரர்கள் மோதிக் கொண்டனர்.
  • ஜூலை மாதத்திற்கு பிறகு தற்போது பெரிய அளவில் சண்டை ஏற்பட்டது.

தாய்லாந்து- கம்போடியா இடையே எல்லையில் உள்ள நகரை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக மோசமான போர் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு, இரு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

கடந்த ஜூலை மாதம் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டனர். ஐந்து நாள் சண்டைக்குப் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அதன்பின் எல்லையில் பதற்றம் சற்று தணிந்தது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் சண்டை தொடங்கியது. இந்த நிலையில் இரு நாடுகளும் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் எல்லையில் நடைபெற்ற ஒருவார சண்டை முடிவுக்கு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சண்டையின்போது 18 கம்போடிய ராணுவ வீரர்களை தாய்லாந்து கைது செய்தது. அவர்களை 72 மணி நேர போர் நிறுத்தத்திற்குப் பிறகு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தாய்லாந்து நிபந்தனை விதித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அழுத்தத்தின்படி மலோசியா மதியஸ்தராக செயல்பட்டு ஜூலை மாதம் போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்தது.

கம்போடியாவில் உள்ள விஷ்ணு சிலையை தாய்லாந்து இடித்து தள்ளியது. இதற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்தது. பின்னர் பாதுகாப்பிற்காகவே சிலையை உடைத்தோம் என தாய்லாந்து சமாளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News