செய்திகள்

கென்யாவில் டிரம்ப் மனைவியை தாக்கிய குட்டி யானை

Published On 2018-10-06 15:05 IST   |   Update On 2018-10-06 15:05:00 IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியாவை குட்டியானை ஒன்று துதுக்கையால் இடித்து தள்ளி தாக்கியது. #MelaniaTrump
நைரோபி:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலானியா குழுந்தைகள் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ளார்.

கென்யா சென்ற அவர் நைரோபியில் உள்ள டேவிட் ஷெல்டிரிக் வன விலங்குகள் சரணாலயம் சென்றார். அங்கு யானைகளுக்கு உணவு வழங்கினார்.

அவரை குட்டியானை ஒன்று துதுக்கையால் இடித்து தள்ளி தாக்கியது. இதை எதிர்பாராத அவர் சிறிது தடுமாறி பின்னர் சுதாரித்துக் கொண்டார். நடந்த சம்பவத்தை வாய் மூடி சிரித்து சமாளித்தார். #MelaniaTrump
Tags:    

Similar News