செய்திகள்

தான்சானியா படகு விபத்து - பலி எண்ணிக்கை 183 ஆக உயர்வு

Published On 2018-09-22 12:27 GMT   |   Update On 2018-09-22 12:27 GMT
தான்சானியா நாட்டில் உள்ள விக்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. #LakeVictoriaFerryAccident
லேக்விக்டோரியா:

தான்சானியா நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான விக்டோரியா ஏரியில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப்படகு திடீரென நீரில் மூழ்கியது. இந்த விபத்து குறித்து உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்களுக்கு மேலாக நடைபெறும் மீட்பு பணிகளில் ஒரே ஒரு நபர் மட்டும் இன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த விபத்தில் ஏற்கனவே 136 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 183-ஆக உயர்ந்துள்ளது. படகில் சுமார் 300 பேர் பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கை நடந்துகொண்டே இருக்கிறது.

இந்த விபத்து குறித்து ஏற்கனவே படகின் உரிமையாளர் உட்பட விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு தான்சானியா அதிபர் உத்தரவிட்டு இருந்தார். இன்று இதுகுறித்து பேசிய போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு மந்திரி இசாக் கம்வெல்வி கூறுகையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அனைவரையும் மீட்கும் வரை மீட்புப்பணிகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். #LakeVictoriaFerryAccident
Tags:    

Similar News