செய்திகள்

பாகிஸ்தானில் அதிபர், பிரதமர் விமான பயணத்திற்கு கட்டுப்பாடு

Published On 2018-08-25 22:40 IST   |   Update On 2018-08-25 22:40:00 IST
பாகிஸ்தான் நாட்டில் அதிபர், பிரதமர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல் வகுப்பில் பய்ணம் செய்ய தடை விதித்து பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. #PakistanCabinet #Bansfirstclassairtravel
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில், அதிபர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில், அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, பார்லிமென்ட் மேலவை மற்றும் கீழவை தலைவர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ தளபதி எப்போதும் சாதாரண வகுப்பில் தான் பயணம் செய்வார். வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமானத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். #PakistanCabinet #Bansfirstclassairtravel
Tags:    

Similar News