செய்திகள்

ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற நாய்

Published On 2018-08-01 11:41 IST   |   Update On 2018-08-01 11:41:00 IST
ஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
சிட்னி:

ஆஸ்திரேலியாவில் கால்கூர்லி நகரில் மராத்தான் போட்டி நடைபெற்றது. அதில் 21 கி.மீ. தூரம் (13 மைல்) ஓட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கியதும் அனைவரும் ஒடினார்கள்.



அவர்களுடன் சேர்ந்த ஒரு நாயும் ஓடியது. போட்டியாளர்களுடன் அந்த நாய் இறுதிவரை ஓடி முடித்தது. எனவே, அந்த நாய்க்கு பதக்கம் வழங்கப்பட்டது. அந்த நாயின் பெயர் ஸ்டார்மி. கருப்பும், பிரவுன் நிறமும் கொண்ட அந்த நாய் கலப்பின வகையை சேர்ந்தது. மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்த நாய் அனைவரின் மனதையும் கவர்ந்தது. #Dog #HalfMarathon
Tags:    

Similar News