செய்திகள்

இந்தியா - ருவாண்டா இடையே 8 ஒப்பந்தங்கள் - 200 பசுக்களை பரிசளித்தார் மோடி

Published On 2018-07-24 10:44 GMT   |   Update On 2018-07-24 10:44 GMT
20 கோடி டாலர் கடன் உதவியுடன் இந்தியா - ருவாண்டா இடையே இன்று 8 ஒப்பந்தங்கள் கையொப்பமானதுடன் ருவாண்டா மக்களுக்கு 200 பசுக்களை நினைவுப்பரிசாக அளித்தார் மோடி. #IndiaRwanda #signpacts
கிகாலி:

சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக ருவாண்டா நாட்டுக்கு சென்ற இந்திய தலைவர் என்ற வகையில் அந்நாட்டின் தலைநகர் கிகாலி-ல் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று ருவாண்டா அதிபர் பால் ககாமே - நரேந்திர மோடி தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ருவாண்டாவில் 3 விவசாய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவும், தலைநகர் கிகாலியில் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தொழிற்பூங்காக்களை உருவாக்கவும் 20 கோடி அமெரிக்க டாலர்களை கடனாக வழங்க மோடி ஒப்புதல் அளித்தார்.


மேலும், இருநாடுகளுக்கு இடையிலான 8 புதிய ஒப்பந்தங்களும் இன்று கையொப்பமாகின. பின்னர், அங்கு வாழும் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி, ருவாண்டில் இந்திய தலைமை தூதரகம் விரைவில் திறக்கப்படும் என குறிப்பிட்டார்.

இந்தியாவின் அன்பளிப்பாக கிராமப்புறங்களில் வாழும் விவசாய மக்களுக்கு 200 பசு மாடுகளையும் மோடி வழங்கினார்.



இன்று மாலை உகாண்டா நாட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, நாளை தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பர்க் நகரில் தொடங்கும் ’பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். #IndiaRwanda #signpacts
Tags:    

Similar News