செய்திகள்

மாலி நாட்டில் இரு சமூகத்தினரிடையே தொடரும் மோதல் - 32 பேர் படுகொலை

Published On 2018-06-25 12:43 IST   |   Update On 2018-06-25 12:43:00 IST
மாலி நாட்டில் உள்ள புலானி மற்றும் டோகன் ஆகிய இருபெரும் சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 32 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். #MaliUnrest
பமாகோ:

மாலி நாட்டில் உள்ள புலானி மற்றும் டோகன் ஆகிய இரண்டு பழம்பெரும் சமூகத்தினருக்கு இடையே நிலம் சார்த்த மோதல் பல காலமாக இருந்து வருகிறது. மாலி நாட்டின் மத்திய பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் உலவுவதாகவும், அவர்களுடன் புலானி இன மக்கள் தொடர்பு வைத்திருப்பதாகவும் டோகன் சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், புலானி மக்கள் வசிக்கும் மோப்தி பகுதியில் உள்ள கவுமகா கிராமத்தை சுற்றிவளைத்த டோகன் இன பாரம்பரிய வேட்டையர்கள், புலானி மக்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காணாமல் போனதாகவும், இதுவரை 16 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கலவரம் நீடிக்காமல் இருப்பதற்காக அதிக அளவிலான பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலி நாட்டில் நீடித்து வரும் இந்த இரு சமூகத்தாருக்கு இடையேயான மோதலை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. #MaliUnrest
Tags:    

Similar News