செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்- 8 பேர் பலி

Published On 2018-05-19 04:05 GMT   |   Update On 2018-05-19 04:05 GMT
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். #afganistan #Blastatstadium
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. மேலும், அவ்வப்போது தலிபான்களின் தாக்குதலில் பொதுமக்களும் காவல் அதிகாரிகளும் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. அப்போது, பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 43-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆளுனர் மாளிகையின் அதிகாரி அட்டல்லா கோக்யானி கூறுகையில், ராக்கெட்டுகள் மூலம் அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், மாகாணத்தின் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகள் மோசமடைந்துள்ளதாக கூறி, மாகாண ஆளுனர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தலிபான்களை போன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. #afganistan #Blastatstadium
Tags:    

Similar News