உலகம்

ஒவ்வொரு நாளும் 10,000 கலோரி உணவு.. விபரீத சேலஞ்ச் - 30 வயது Fitness coach மாரடைப்பால் மரணம்

Published On 2025-11-27 21:02 IST   |   Update On 2025-11-27 21:02:00 IST
  • 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.
  • மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.

ரஷியாவின் ஷ்யாவின் ஓரன்பர்க் நகரைச் சேர்ந்த 30 வயதான டிமிட்ரி நுயான்சின், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் சமூக ஊடகங்க பிரபலமாகவும் உள்ளார்.

தனது எடை இழப்புத் திட்டத்தை விளம்பரப்படுத்த, அவர் 25 கிலோ எடையை அதிகரித்து பின்னர் அதைக் குறைக்கும் சவாலைத் தொடங்கினார்.

இதன் ஒரு பகுதியாக, சில வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் 10,000 கலோரிகளுக்கு மேல் ஜங்க் ஃபுட் சாப்பிடத் தொடங்கினார்.

காலையில் பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள், மதியம் மயோனைஸுடன் பாலாடைக்கட்டிகள், இரவில் ஒரு பர்கர் மற்றும் இரண்டு சிறிய பீட்சாக்கள் சாப்பிடுவார்.

இந்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மாதம் 18 ஆம் தேதி தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோவை எட்டியதாக அவர் கூறியிருந்தார்.

இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது நண்பர்களிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், தனது பயிற்சி வகுப்புகளை ரத்து செய்வதாகவும் கூறினார். ஆனால் மறுநாள் அவர் தூக்கத்தில் மாரடைப்பால் இறந்தார். 

Tags:    

Similar News