செய்திகள்

அதிநவீன புதிய அம்சங்களுடன் புதிய ஆப்பிள் ஐபேட் ப்ரோ அறிமுகம்

Published On 2018-10-30 15:44 GMT   |   Update On 2018-10-30 15:44 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 2018 ஐபேட் ப்ரோ சாதனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #iPad2018



ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் எவ்வித பட்டன்களும் வழங்கப்படவில்லை, ஐபோன் X மாடலில் அறிமுகம் செய்யப்பட்டதை போன்ற ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் அதிகம் மேம்பட்ட நிலையில், புதிய டேப்லெட்டில் ஆப்பிள் வழங்கியுள்ளது.

புதிய ஐபேட் ப்ரோ மாடல் 10.5 இன்ச், 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என மூன்று வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ப்ரோ ஏ12X 7என்.எம். பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஏ12X பிராசஸரில் 8-கோர் சி.பி.யு., சிங்கிள் கோர் செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 35 சதவிகிதம் வேகமாகவும், 90 சதவிகிதம் வேகமாகவும் இருக்கிறது.

புதிய ஏ12X பயோனிக் சிப்செட்டில் இருமடங்கு கிராஃபிக்ஸ் செயல்திறன் மற்றும் ஒரு நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி, யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது. 



ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 10.5 இன்ச், 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
- ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம்
- ஜெஸ்ட்யூர் இன்டர்ஃபேஸ்
- ஏ12X பயோனிக் பிராசஸர், நியூரல் என்ஜின்
- ட்ரூ டெப்த் கேமரா
- குரூப் ஃபேஸ் டைம்
- 12 எம்.பி. கேமரா, மேம்படுத்தப்பட்ட ட்ரூ டோன் ஃபிளாஷ்
- 10 மணி நேர பேட்டரி பேக்கப்
- 1000 ஜி.பி. மெமரி
- யு.எஸ்.பி. டைப்-சி
- புதிய ஆப்பிள் பென்சில்

புதிய ஐபேட் ப்ரோ மாடலுடன் புதிய வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் பென்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பென்சில் ஐபேட் உடன் இணைந்து கொள்ள காந்த சக்தியும், தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதியும் கொண்டுள்ளது. 

புதிய ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் விலை 649 டாலர்கள், 11.0 இன்ச் விலை 799 டாலர்களும், 12.9 இன்ச் விலை 999 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இன்று துவங்கி இருக்கும் நிலையில், நவம்பர் 7ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.
Tags:    

Similar News