தமிழ்நாடு செய்திகள்

4வது நாளாக தொடரும் போராட்டம்- இடைநிலை ஆசிரியர்களை குண்டுகட்டாக கைது செய்த காவல்துறை

Published On 2025-12-29 11:53 IST   |   Update On 2025-12-29 11:53:00 IST
  • மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் தள்ளுமுள்ளு.
  • காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினா காமராஜர் சாலையில் பேரணியாக சென்றபோது தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள்- காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பேரணியை தடுத்ததால் இடைநிலை ஆசிரியர்கள் மெரினா காமராஜர் சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், காமராஜர் சாலையில் பேரணி சென்ற இடத்தில் ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர்.

பேரணியாக சென்றபோது காவல்துறையினர் உடனான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இடைநிலை ஆசிரியர் ஒருவர் மயக்கமடைந்தார்.

கடந்த 2009ம் ஆண்டில் மறைந்த கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News