தமிழ்நாடு செய்திகள்
null

அ.தி.மு.க.விடம் அதிக எண்ணிக்கையில் தொகுதி கேட்கப்படுமா?- நயினார் நாகேந்திரன் பதில்

Published On 2025-08-03 16:04 IST   |   Update On 2025-08-03 16:05:00 IST
  • காவிரி ஆற்றில் படித்துறையில் காவிரி தாய்க்கு ஆராத்தி வழிபாடு மேற்கொண்டார்.
  • தினமும் பல்வேறு இடங்களில் ஒன்று , இரண்டு, கொலை நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி18 விழாவினை முன்னிட்டு இன்று காலை

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்து காவிரி ஆற்று படித்துறையில் விசேஷ ஹோம பூஜையில் கலந்துகொண்டார்.

பின்னர் அவர், வயதான தம்பதியினருக்கு பாத பூஜை நடத்தி வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் படித்துறையில் காவிரி தாய்க்கு ஆராத்தி வழிபாடு மேற்கொண்டார்.

அப்போது அவர் பால், இளநீர், மஞ்சள், தயிர் பூ என பல்வேறு பொருட்களை காவிரி ஆற்றில் விட்டு வழிபாடு மேற்கொண்டார்.

பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் ஒன்று , இரண்டு, கொலை நடந்து வருகிறது.

இதற்கு கஞ்சா, போதை வஸ்துக்கள் தான் மிக முக்கிய காரணம். கிராமங்களில் கூட கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை. தேர்தல் வர உள்ளதால் இந்த ஆண்டு பணம் தருவார்கள்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையில் எம்.பி எம்.எல்.ஏ ஒருமையில் பேசி மோதிய சம்பவம் அவர்களின் உள்காட்சி குழப்பத்தை காட்டுகிறது.

அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அவர்களின் கட்சியில் மட்டுமல்ல கூட்டணியில் ஒற்றுமை இல்லை.

வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று செயல்படுகிறார்கள். ஆனால், திமுக., கூட்டணி மக்களிடம் செல்வாக்கை இழந்ததாக உள்ளது.

ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தேர்தல் அறிக்கையில் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்தனர். ஆனால் இதுவரை தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றவில்லை.

முதலமைச்சர் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி விற்கப்பட்டு வருகிறது. கிட்னி விற்பதில் தான் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றார்.

அ.தி.மு.க விடம் அதிக எண்ணிக்கையில் தொகுதி கேட்கப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து நயினார் நாகேந்திரன் கூறும் போது, "எங்களின் நோக்கம் தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே ஆகும். அதில் யாருக்கு எத்தனை சீட்டு என்பது முக்கியமல்ல" என்றார்.

Tags:    

Similar News