தமிழ்நாடு செய்திகள்

எங்களிடம் மனதில் நேர்மையும், கறை படியாத அரசியல் கைகளும் இருக்கிறது- விஜய்

Published On 2025-04-26 18:49 IST   |   Update On 2025-04-26 18:49:00 IST
  • பூத் கமிட்டி ஏஜெண்டுகள் தான் தேர்தல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
  • நாம் என்ன செய்ய உள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் நீங்கள்.

பூத் கமிட்டி கருத்தரங்கு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் என் நெஞ்சில் குடியிருக்கும் கோவை மக்களுக்கும், எனது தோழர்களுக்கும் வணக்கம் என தனது உரையை தொடங்கினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

கோவை என்றாலே மக்களின் மரியாதை தான் முதலில் ஞாபகம் வருகிறது.

பெயர் தான் பூத் லெவல் பயிற்சி பட்டறை. ஆனால் இங்கு வேறு ஏதோ நிகழ்வு நடப்பதை போல உள்ளது.

பூத் கமிட்டி என்றால் ஓட்டுக்காக நடைபெறுவது மட்டும் அல்ல என்பது எனது பார்வை. மக்களுடன் நாம் ஓன்றிணைய போகிறோம் என்பது தான் இந்த பயிற்சி பட்டறை.

இதுவரை செய்தவர்களை போல் நாம் செய்ய போவதில்லை. மனதில் நேர்மை இருக்கு, கறை படியாத அரசியல் கைகள் உள்ளது. உழைக்க உடம்பில் தெம்பு இருக்கிறது. நமக்கான களம் தயாராக இருக்கிறது.

மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கும் வேலை நடக்க விட மாட்டோம்.

பூத் கமிட்டி ஏஜெண்டுகள் தான் தேர்தல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆட்சிக்கு வர நினைப்பது மக்களுக்காக மட்டுமே. மக்களின் நலனுக்காக மட்டுமே தவேக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.

நமது கட்சி மேல் நம்பிக்கையை மக்களிடம் கொண்டு வரப் போவதே பூத் லெவலில் வேலை பார்க்கும் நீங்கள் தான். நாம் என்ன செய்ய உள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் நீங்கள்.

நம்பிக்கையோடு களம் இறங்குங்கள் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News