போர்க்கால ஒத்திகை - ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த ஐ.டி. நிறுவனங்கள்
- நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
- போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கிவிட்டது.
மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்படி தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய 2 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு இந்த போர்க்கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடைய தேவை இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி ஐ.டி. நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.