தமிழ்நாடு செய்திகள்

விஜய்யின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் - நயினார் நாகேந்திரன்

Published On 2025-10-27 22:46 IST   |   Update On 2025-10-27 22:46:00 IST
  • 41 பேரின் குடும்பத்தினரையும் இன்று சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் கூறினார் விஜய்.
  • பாலியல் வன்கொடுமையால் சாலைகளில் 10, 15 வயது பிள்ளைகள் தனியாக நிற்க முடியவில்லை.

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கினார் விஜய்.

அனுமதி உள்பட பல்வேறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் இன்று சென்னைக்கு வரவழைத்து நேரில் ஆறுதல் கூறினார் விஜய். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.

இதுவரை இல்லாத நடைமுறையாக பாதிக்கப்பட்டவர்களை தான் இருக்கும் இடதிற்கு அழைத்து வந்து அரசியல் தலைவர் ஒருவர் ஆறுதல் கூறுவது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து சிவகங்கையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கரூரில் மக்களுக்கே பாதுகாப்பு இல்லை.

அங்கு சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. அதையே அவரும் கருதியிருக்கலாம். அதனால் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறியிருக்கலாம்.

திமுக ஆட்சியில் கரூரில் 41 பேர் இறந்து விட்டனர், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 65 பேர் இறந்து விட்டனர், பாலியல் வன்கொடுமையால் சாலைகளில் 10, 15 வயது பிள்ளைகள் தனியாக நிற்க முடியவில்லை.

திமுக அரசு மக்கள் விரோதமாக இருப்பதால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News