தமிழ்நாடு செய்திகள்

ரெயில்வே பணிகளை துரிதப்படுத்துங்க! விஜய் வசந்த் MP வலியுறுத்தல்

Published On 2025-03-05 14:54 IST   |   Update On 2025-03-05 14:54:00 IST
  • பணிகள் தொடங்கிய போதிலும் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
  • பணிகளை துரிதப்படுத்தி இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரெயில்வே துறை சம்மந்தமான பல்வேறு திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளை உணர்ந்து பாராளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்து, அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த திட்டங்களை குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல், புதிய ரெயில்வே பாலங்கள் போன்ற இந்த பணிகள் தொடங்கிய போதிலும் மிக மந்த கதியில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை துரிதப்படுத்தி இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அவர்களை சந்தித்து கேட்டுக்கொண்டேன் என கூறியுள்ளார். 

Tags:    

Similar News